Monday, December 19, 2005

டுபாகூர் காதல் - Dubbakur Kadhal

Tamil Font

If you have problem in Viewing this BLOG in Tamil. Please click the below link and follow the steps as said in that link.

Tamil Fonts

Still if you have Problem, Please mail me or post your comments here. I will reply for sure.

Romanized Keystrokes For Typing in Tamil - தமிழில் தட்ட உதவும் அட்டவணை

First I want to thank Shan for the below link.



I copied the text from that link(Why? In case if he deleted that Post in future..For that reason. Did I ask permission from him? No, He will say "Yes" for good things)

This is the mapping I use in the converter to type Tamil. I use the converter from Jaffna Library.
I did not find a map anywhere. I had to figure it out intuitively. So for the benefit of others, here it is:

Romanized keyboard mapping:

1. உயிர் (Vowels)

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ
a A i I u U e E ai o O au q

2. மெய்(Consonants)

A) மெல்லினம் (soft vowels)
k s t th p r
க் ச் ட் த் ப் ர்

B) இடையினம் (Medium vowels)
ng nj N nth m n
ங் ஞ் ண் ந் ம் ன்

C) வல்லினம் (Hard vowels)
y R l v L z
ய் ற் ல் வ் ள் ழ்

5. உயிர் மெய் உதாரணம் ( Compound example )

க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ka kA ki kI ku kU ke kE kai ko kO kau

4. சமஸ்கிருத மெய் எழுத்துக்கள் (Borrowed vowels from Sanskrit)

j sh S -h
ஜ் ஷ் ஸ் ஹ்

5. தமிழ் சமஸ்கிருத கூட்டெழுத்து உதாரணங்கள் (Tamil-Sanskrit compound letter examples)

க்ஷ் is ksh or X
க்ஷி is kshi or Xi

6. ஸ்ரீ (sri) Special letter Workarounds

ஸ்ரீ
! in Mylai font
c in Dinamani font

7. In English alphabetic order

a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z
அ ப் c ட் எ f க் க் இ ஜ் க் ல் ம் ந் ஒ ப் ஃ ர் ச் ட் உ வ் ந் x ய் ழ்

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
ஆ B C D ஏ F G H ஈ J K ள் M ண் ஓ P Q ற் ஸ் T ஊ V W க்ஷ் Y Z

ஸ்ரீ. It is SrI

பார்த்ததில் பிடித்தது - தமிழில் டைடானிக்

Tamil Comedy Titanic based on movie "Gilli"

Saturday, December 17, 2005

க்ளிக்கயதில் பிடித்தது


Posted by Picasaநண்பன் ராஜ்குமார் எடுத்த படம்

Thursday, December 15, 2005

படித்ததில் பிடித்தது

கல்லூரிக் காலத்தில்
குடும்பம் பற்றி பல கனவுகள்
குறிப்பாக மனைவி
புடவை உடுத்தி
பொட்டு வைத்து
பின்னல் இட்டு
பூ முடிந்து
கூட்டுக் குடும்பதில்
அமைதி அடக்கத்துடன்
அனைவரையும் கவர்ந்தாள்
கனவில் அவள்
பேசியதெயில்லை
பேசியிருந்தால்
பித்தம் அன்றே தெளிந்திருக்கும்

கனவு கல்யாணம் வரை தொடர்ந்தது
உள்ளுர் ஜோதிடரின் தயவால் மணநாளும் வந்தது
விடுப்பெடுத்து விமானம் ஏறி
ஊர் கூட்டி உறவுகள் சூள
அவள் கரம் பற்றி கணவனானேன்

மணமேடையில் அவள் தலை தாழ்த்தி நின்றது
அடக்கத்தாலோ அச்சத்தாலோ அல்ல
அணிந்திருந்த மாலை நகைகளின் பாரத்தால்
என்பது போக போக புரிந்தது

வீட்டில்
தாய் தந்தை அவளிடம் பரிவு காட்ட
அவளும் அவர்களிடம் பாசத்தை கொட்ட
இல்லற இன்பத்தை
இதயம் முழுக்க அனுபவித்தேன்

வீட்டின் சிரிப்பொலிக்கு
வினை விருந்துருவில் வந்தது
வீட்டிற்கு புதிதாக வந்த ஓட்டை கைப்பற்ற
விருந்திற்கு அழைத்தனர் உறவினர்கள்

விருந்தறையில் நான் மட்டும் விற்றிருக்க
சமையலறையில்
என் குடும்ப சரித்திரத்தை
சத்தமில்லாமல் அவளிடம் வாசிக்க
அதில் என்
காதில் விழும்படி சொல்லப்பட்ட
கடைசி வரி
இவன் மட்டும் நல்லவன்

வீட்டில் அதுவரை
பூத்துக்குலுங்கிய
அவளின் புன்சிரிப்பு
விருந்திற்கு பின்
புன்னகையாய் சுறுங்கியது

விடுப்பு முடிந்து விமானநிலையத்தில்
வழியனுப்ப வந்த
அவள் வீட்டினர்கள்
அனுசரித்து நடக்கும் அறிவுரையை
அவளிடம் கூறாமல் என்னிடம் கூற
அதிர்சியோடு அவளுடன்
அமெரிக்கா திரும்பினேன்

முதல் நாள் மாலை
தனிமையின் கொடுமை இனியில்லை என
தனியாத ஆர்வத்துடன்
தாமதிக்காமல் வேலை முடித்து
பூக்களோடு வீடு திரும்ப

அண்டை நாட்டு
அரசன் கைப்பற்றிய
அரண்மனை போல் வீடு
சூரையாடப்பட்டிருந்தது

படித்த புத்தகங்கள்
பழைய பாடல்கள்
படுக்கை விரிப்புக்கள்
பாதுகைகள்
பாத்திரங்கள்
பாதி துணிமணிகள்
பார்வைக்கு தென்படவில்லை
அவளை தவிர நான் ரசித்த எதையும்
அவள் ரசிக்கவில்லை என்பது
விளங்கியது

புதியன வாங்க புறப்பட்டோம்
அந்த அநியாயத்திற்கு
ஆங்கிலத்தில் Shopping என்று பெயர்

கடுங்குளிரிலும் கார் ஓட்டி
கடைகள் பல ஏறி இறங்கி
கதவை நான் திறந்து பிடிக்க
அவள்
கால்களால் கடை அளந்து
கண்களால் பொருள் அளக்க
நான்
கடிவாளம் கட்டிய குதிரையாய் அவள் பின் நடந்து
கால்கடுக்க காத்திருந்து
கடுங்கோபதைக் கட்டுப்படுத்தி
காலம் கடத்த
கடைசியில் கண்டதையும் காட்டி
கட்டாயம் வேண்டுமென அவள் கூற
காரணமே தெரியாமல் அனைத்தையும்
கணிப்பொறியில் கணக்கிட்டு
கடன் அட்டையில் வாங்கி
கார் நோக்கி நடந்த
என் கை முழுக்க குடும்ப பாரம்

இதுவே வாடிக்கையாக
அதலபாதாள்த்தில் இருந்த
அமெரிக்க பொருளாதாரம்
அவ்வாண்டே மீண்டது

வீட்டில்
சீதனமாய் கொண்டு வந்த
சமையல் புத்தகத்தை
அவள் புரட்டிய போதெல்லாம்
நான் சோதனைக் கூட எலியானேன்

கடுகினும் சிறிய பொட்டை
கவனிக்க தவறினாலும்
காதல் இல்லை
பாசம் இல்லை
போன்ற பழிச்சொற்களுக்கு ஆளானேன்

அதுவரை
உலக செய்திகளை மட்டுமே
உற்று கவனித்து வந்த நான்
அன்று முதல்
உடைந்த நகம்
உதிர்ந்த முடி
காதணியின் கற்கள்
காலணியின் அழகு
இவற்றையெல்லாம்
உண்ணிப்பாய் கவனித்து
உடனுக்குடன் தெரிவித்தேன்

அவளை பற்றிய விசயங்களில்
என்னோடு கலந்து பேசி
அவளே முடிவு செய்தாள்
என்னை பற்றிய விசயங்களில்
முடிவு முன்பே எடுக்கப்பட்டு
என்னிடம் அறிவிக்கப்பட்டன

குற்றங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன
குறைகள் அனைத்தும் மறக்கப்பட்டன
பிழைகள் அனைத்தும் ரசிக்கப்பட்டன

மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள்
தொண்ணூறு நாட்கள் கழித்து
திருமணத்திற்கு பின்
முதல் முறையாக
மூளை தன் இருப்பை உணர்த்தி
நான்
எத்தனை முறை ஏமாளியானேன்
என்ற எண்ணிக்கையை எடுத்துரைக்க
எதிர்க்க தயாரானேன் நான்

துரும்பெல்லாம் தூணாக
வீடு போர்க்களமானது
அதுவரை கணவனாக மட்டுமே இருந்த நான்
ஒட்டு மொத்த ஆண் இனத்தின்
பிரதிநிதியாக ஆக்கப்பட்டு
ஆண் இனம் இழைத்த
அனைத்து கொடுமைகளின் பழியும்
என் மீது சுமத்தப்பட
சளைக்காமல் நானும் அதை சமாளிக்க
சற்றும் எதிர்பாரா நேரத்தில்
ஓர் அழிவு ஆயுதம் என்னை தாக்கியது
மூளையை செயல் இழக்க செய்து
பேசும் ஆற்றலை தடுத்து
பயங்கர எரிச்சலை எற்படுத்திய
அந்த ரசாயன ஆயுதத்திற்கு
கண்ணீர் என்று பெயர்

அறிது அறிது மானிடராய் பிறப்பதறிது
அதனினும் அறிது ஆசை இல்லாத பெண்
அதனினும் அறிது அழத் தெரியாத பெண்

அழுகைக்கு பின்
படுக்கை அறையின்
பக்கத்து அறை அவளின்
தற்காலிக தாய் வீடானது

அமைதி முயற்சிக்கு நடந்த
அனைத்துச் சுற்று பேச்சு வார்தைகளும்
தோல்வியில் முடிந்தது

சண்டையை முடிக்க
சரணடைவதைத் தவிர
வேறு வழியெதுமில்லை என
என் பாழாய் போன மனம் பரிதவிக்க
சரி என்ற
ஈறேழுத்து மந்திரத்தை நான்
இடை விடாது உச்சரிக்க
இல்லத்தில் அமைதி திரும்பி
குடும்பம் ஒரு கோவிலானது
நான் ஒரு கோமாளியானேன்

பழைய நண்பர்களை
புதிய கோணத்தில் பார்க்க வைத்தாள்
நண்பனின் மனைவியை இவளுக்கு
பிடித்திருந்தால் மட்டுமே
நட்பு நீடித்தது

ஆசைப்பட்ட அனைத்தும்
வேண்டும்மென அடம் பிடித்தாள்
வேண்டியது கிடைக்காவிட்டால்
வேலை நிறுத்தம்
மனைவி ஒரு மந்திரி
என்பதற்கு என்ன பொருள்
லஞ்சம் இல்லாமல் வேலை
நடக்காது என்று பொருள்

செலவை சமாளிக்க
நான் வீட்டுக் கணக்கை கையில் எடுக்க
அவளோ
நான் வீட்டுக்கு அனுப்பும் கணக்கை கையில் எடுத்தாள்
இனி
சம்பள உயர்வைத் தவிர
வேறு வழியில்லை என
சண்டையிட்டு நான் பெற்ற
சம்பள உயர்வை
தான் வந்த வேளை என்றாள்

மாதங்கள் பல உருண்டன
மணவாழ்வின் அடுத்த கட்டம்
மனைவி கருவுற்றாள்
மகிழ்ச்சி மசக்கை வரை நீடித்தது
அவள் படும் அவஸ்தைகள்
ஆண்களுக்கு இல்லை
படைப்பின் பிழைக்கு
நான் பலியானேன்
இன்னல்களை இடைவிடாது கூறி
இடுப்பு வலிக்கு
இப்பொதே பயந்தாள்
இனி வீட்டு வேலை
இருவருக்கு போது என்றாள்
இட்ட வேலைகளை தட்டாமல் செய்து முடிக்க
என் இடுப்பு அன்றே வலி கண்டது
பிரசவத்திற்கு அத்தை வர
பிழைத்தேன் நான்

தாயும் மகளுமே ஆனாலும்
ஒரே வீட்டில்
இரண்டு பெண்கள்
இணக்கமாக வாழ்ந்தால்
அது எட்டாவது உலக அதிசயமாகத்தான்
இருக்க முடியும்

நான் தின்று செரித்த
என் தாய் மண்னை மகனுக்கு
அடையாளம் காட்டும் ஆவலில்
தாயகம் சென்றோம்
யார் வீட்டில் எத்தனை நாள்
என்னும் விடையில்லா கேள்விக்கு
மாமியார் மருமகளுக்கு இடையிலான
பனிப்போர் பதிலானது
பெயரில் தான் பனி
நிஜத்தில் வெப்பம் என்னை தாக்கியாது
பனிப்போர் பார்வைப் போராகி
பின் சொற்போராய் முடிந்தது
இறந்தகால பண்பாட்டை தாய் கூற
எதிர்கால் பெண்னுரிமையை இவள் பேச
இருவருக்கு இடையில் சிக்கிய என்
நிகழ்கால நிம்மதி நாசமானது

விடுப்பு முடிந்து திரும்பியதும்
விரைந்து பச்சை அட்டைக்கு வின்ண்ப்பித்தேன்
நண்பர்களின் கேள்விக்கு
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என தமிழை துணைக்கழைத்தேன்

சிக்கல்கள் இருந்தும்
சிந்தையில் அவளே
சிம்மாசனம் இட்டு
வீற்றிருக்க காரணம்
வேதாளம் இல்லா
விக்கிரமன் வீண்

-வாசுதேவன்

************

கார்திகை திபம் அண்று அப்பா அனுப்பிய டிஜிடல் புகை படம்


நான் கார்திகை திபம் கொன்டாடியெ பத்து பாதினைந்து வருடம் ஆயிவிட்டது.
கடைசியாக மயிலாப்புரில் சின்ன சித்தப்பா விட்டில் கொன்ட்டாடியதாக நாபகம் !

குறிப்பு: ஏன் அம்மா என்னை அடிக்கடி " நாபகம் " எண்று சொல்லாதெ " ஞாபகம் " எண்று சொல் என்பார்கள். அது மற்றும் நாபகம் இறுக்கிறது ஆணால் " ஞாபகம் " தான் (வாயில்)வரவில்லை.

எனக்கு பிடித்த(புளித்த) என் கவிதை

யாருக்கு எப்படியோ என் கல்லூரி
எனக்கு அது சொர்க்கம்.

ஆமாம்!
திருமனம் சொர்க்கதில்தான் நிச்சியக்க படுதாமே?


- சுவாமிநாதன்

ஏன் எழுதுகிறேன் இங்கே?

நான் ஒரு தாய்மொழி மறந்த தமையன்
ஆங்கிளம் எழுத பேச நினைத்து, இப்பொது தமிழ் மற்றுமே பெச வருகிறது.

ஆங்கிளம் எழுத பேச? :-( வெலைக்கே ஆகவில்லை

சரி தமிழை(லை) கொஞ்ம் கற்று"கொல்லாம்" என்று கிருக்கிறென்.

தமிழ் மேல் அக்கரை உள்ளவர்கள் என்னை திருத்தலாம்.

நான் எழுதும் முதல் ப்லாக்

என் தாய் தந்தையரின் தியாகத்தின் அடையாளம் ?
என் வாழ்கை

- சுவாமிநாதன்